ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு கூட்டுத்தொழிலில் லாபம் கிட்டும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

யோகமான நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.

ரிஷபம்

சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். குடும்பப் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்

அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பணியாளர்களால் தொல்லையுண்டு. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

கடகம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வாகனப் பழுதுகள் வாட்டம் ஏற்படும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் பிரச்சனை அதிகரிக்கும்.

சிம்மம்

நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.

கன்னி

இனிமையான நாள். உத்தியோக ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வரன்கள் முடிவாகும்.

துலாம்

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட வகையில் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.

விருச்சிகம்

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். குழந்தைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.

தனுசு

முக்கியஸ்தர்களை சந்தித்து முடிவெடுக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் போதுமானதாக இருக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும்.

மகரம்

வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கூட்டுத்தொழிலில் லாபம் கிட்டும்.

கும்பம்

சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மீனம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.