ராசிபலன் 
ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 27.6.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வரன்கள் வாயில் தேடி வரும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். கூட்டாளிகள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்ள மாட்டார்கள். விரயங்கள் கூடும். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாண கனவுகள் நனவாகும்.

மிதுனம்

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பக்கத்திலுள்ளவர்களின் பகை மாறும்.

கடகம்

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வரவும், செலவும் சமமாகும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

சிம்மம்

நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

கன்னி

முயற்சி கைகூடும் நாள். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். அயல் நாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களிலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

துலாம்

தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். வரவு திருப்தி தரும்.

விருச்சிகம்

நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். தொழிலில் வருமானம் உயரும். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள்.

தனுசு

வெற்றி செய்திகள் வந்து சேரும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.

மகரம்

மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள். மகிழ்ச்சிப் பயணம் உண்டு. மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்

பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். பாராட்டும் புகழும் கூடும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

மீனம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டவேண்டிய நாள். நேற்றைய பிரச்சனை இன்றும் நீடிக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேற கையிருப்பை கரைக்க நேரிடும்.