முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
நினைத்தது நிறைவேறும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவர்.
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். பயணங்களின்போது கைப்பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது.
அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும் நாள். பணவரவு போதுமானதாக இருக்கும். தொழிலில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
பொருளாதார முன்னேற்றம் திருப்தி தரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையைவிட்டு விலகி செல்வர்.
கொடுத்த தொகை குறித்தபடி வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். அலைபேசி வழித்தகவலால் ஆதாயம் உண்டு.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.
வெற்றி தேவதை வீடு தேடி வரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. பணம் உங்களின் பையை நிரப்பும். நினைத்த காரியம் நிறைவேறும்.
வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில் சம்பந்தமான பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்களின் பகை உண்டு. எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும்.