ஆன்மிகம்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 22.6.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.

மேஷம்

எதிரிகள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் ரீதியான பயணங்கள் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் ஏற்படும்.

ரிஷபம்

யோகமான நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. மங்கல செய்தியொன்று வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு தொகை கிடைக்கும்.

மிதுனம்

முன்னேற்றம் கூடும் நாள். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

கடகம்

போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். சுணங்கிய காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

சிம்மம்

குடும்பச்சுமை கூடும் நாள். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக்கொள்ள நேரிடும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும்.

கன்னி

பிரச்சனைகள் தீரும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமை தரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

துலாம்

மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். அதிக செலவில் முடியும் என்று நினைத்த காரியம் குறைவான செலவில் முடியும்.

விருச்சிகம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரியும்.

தனுசு

பாசமிக்க உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு உண்டு.

மகரம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள திட்டமிடுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

கும்பம்

பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். விரும்பிய பயணம் விலகிப் போகலாம். தொழில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

மீனம்

எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும் நாள். சுபச் செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும். தொழில் நலன் கருதி முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.