ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 ஜூன் 2026: சனி பிரதோஷம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-13 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திரயோதசி பின்னிரவு 2.21 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம் : அனுஷம் நள்ளிரவு 12.07 வரை பிறகு கேட்டை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்

சனி பிரதோஷம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ஊஞ்சலில் காட்சி. திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் ரதோற்சவம். ஸ்ரீமந் நாதமுனிகள் திருநட்சத்திர வைபவம். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தர நாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் காலை அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் தலங்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் தலங்களில் திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம். திரு இந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் புறபபாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் மாலை ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் - நலம்

ரிஷபம் - பெருமை

மிதுனம் - சாந்தம்

கடகம் - நன்மை

சிம்மம் - உதவி

கன்னி - பாசம்

துலாம் - திறமை

விருச்சிகம் - பரிவு

தனுசு - வெற்றி

மகரம் - வரவு

கும்பம் - அன்பு

மீனம் - இன்பம்