ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஜூன் 2026: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-12 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி நள்ளிரவு 12.32 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : விசாகம் இரவு 9.41 வரை பிறகு அனுஷம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை

ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. கானாடுகாத்தான் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். திருநெல்வேலி ஸ்ரீ சுவாமி தங்கப் பல்லக்கு, ஸ்ரீ அம்பாள் தவழ்ந்த திருக்கோலமாய் முத்து பல்லக்கில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாடவீதி புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் காலை அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - உயர்வு

ரிஷபம் - களிப்பு

மிதுனம் - பரிசு

கடகம் - ஆக்கம்

சிம்மம் - பரிவு

கன்னி - நற்செயல்

துலாம் - மதிப்பு

விருச்சிகம் - மாற்றம்

தனுசு - ஊக்கம்

மகரம் - உதவி

கும்பம் - அமைதி

மீனம் - தாமதம்