ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 24 ஜூன் 2026: பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆனி-10 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி இரவு 9.46 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : சித்திரை மாலை 5.45 வரை பிறகு சுவாதி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்

சுபமுகூர்த்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பட்டபிரான் ரதோற்சவம், மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி உற்சவாரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் அலங்கார திருமஞ்சன சேவை.

கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம் வழிபாடு, அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - வரவு

ரிஷபம் - ஆதரவு

மிதுனம் - துணிவு

கடகம் - உண்மை

சிம்மம் - உழைப்பு

கன்னி - ஜெயம்

துலாம் - போட்டி

விருச்சிகம் - பரிவு

தனுசு - நன்மை

மகரம் - உயர்வு

கும்பம் - சுகம்

மீனம் - பண்பு