ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 23 ஜூன் 2026: திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு ஆனி-9 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : நவமி இரவு 9.03 வரை பிறகு தசமி

நட்சத்திரம் : அஸ்தம் மாலை 4.25 வரை பிறகு சித்திரை

யோகம் : சித்தயோகம்

ராகு காலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பட்டபிரான் புறப்பாடு

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி. திருக்கோளக்குடி ஸ்ரீ ககோளபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ஊஞ்சலில் காட்சி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பட்டபிரான் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்.

திரு நெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவ ரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அமைதி

ரிஷபம்-ஆர்வம்

மிதுனம்-சுகம்

கடகம்-புகழ்

சிம்மம்-நிம்மதி

கன்னி-ஆதரவு

துலாம்-சாந்தம்

விருச்சிகம்-அன்பு

தனுசு-பெருமை

மகரம்-கவனம்

கும்பம்-நிறைவு

மீனம்-சாந்தம்