பராபவ ஆண்டு, ஆனி-8 (திங்கள்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி இரவு 8.49 வரை பிறகு நவமி
நட்சத்திரம் : உத்திரம் பிற்பகல் 3.35 வரை பிறகு அஸ்தம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
ஆனி உத்திர தரிசனம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் தங்க பூத வாகனத்திலும் அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் பவனி, காணாடுகாத்தன் ஸ்ரீ சிவபெருமான் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் ஊஞ்சலில் காட்சியருளல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பட்டபிரான் தண்டியலில் புறப்பாடு. வேலூர் கோட்டை ஸ்ரீ துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம்.
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி
மேஷம் - அன்பு
ரிஷபம் - மகிழ்ச்சி
மிதுனம் - ஆக்கம்
கடகம் - உயர்வு
சிம்மம் - ஆதரவு
கன்னி - அமைதி
துலாம் - வரவு
விருச்சிகம் - பக்தி
தனுசு - நற்செயல்
மகரம் - நன்மை
கும்பம் - நட்பு
மீனம் - உதவி