பராபவ ஆண்டு, ஆனி-18 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை காலை 9.27 வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : உத்திராடம் காலை 9.41 வரை பிறகு திருவோணம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுபமுகூர்த்த தினம். திருவோண விரதம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூம்பல்லக்கிலும் பவனி திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
மேஷம் - போட்டி
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - அமைதி
கடகம் - தெளிவு
சிம்மம் - மாற்றம்
கன்னி - விவேகம்
துலாம் - நட்பு
விருச்சிகம் - கவனம்
தனுசு - லாபம்
மகரம் - நலம்
கும்பம் - வரவு
மீனம் - தவம்