திருவக்கரை வக்ரகாளியம்மன் 
ஆன்மிகம்

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் ஜோதி தரிசனம் ரத்து

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படியும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும், பக்தர்களின் நலன் கருதியும் நாளை(6-ந் தேதி) சித்திரை மாத பவுர்ணமி மகாதீபம் ஜோதி தரிசனம் திருவிழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று மகா தீபம் ஏற்றப் படுவது வழக்கம்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படியும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டும், பக்தர்களின் நலன் கருதியும் நாளை(6-ந் தேதி) சித்திரை மாத பவுர்ணமி மகாதீபம் ஜோதி தரிசனம் திருவிழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தினத்தில் பக்தர்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்கு மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.