ஆன்மிகம்

சிவனுக்கு உகந்த ஊமத்தம் பூ

சிவனுக்கு உகந்த மலர்களுள் ஊமத்தம் பூ மிகவும் முக்கியமானது.

சிவனுக்கு உகந்த ஊமத்தம் பூ உன்மத்தன் பூ என்பதே ஊமத்தம்பூ என்றானது. பாவம் பண்ணாமல் இருக்கிறவர்களை உன்மத்தன் என்று சொல்வார்கள். பரமேஸ்வரனுக்கு உன்மத்தசேகரன் என்று பெயருண்டு.

ஊமத்தம் பூவைத் தரித்துக் கொண்டிருப்பதாலும், பாவங்களைச் செய்யாவதராக இருப்பதாலும் சிவனுக்கு அப்பெயர் ஏற்பட்டது. பித்தா பிறைசூடி பெருமானே என்று சுந்தரமூர்த்தி நாயனார் சிவனைப் பித்தனே என அழைக்கிறார்.

யாரும் மதிக்காத ஊமத்தம்பூவை பிரியத்துடன் சிவன் ஏற்று அம்மலருக்கு சிவன் சிறப்பு கொடுத்துள்ளார்.