அந்ரி பாணயே சிவம் கராயதே நம:
சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம:
சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய
பொருள்: மங்களத்தைச் செய்பவரும், துயரமெனும் சமுத்திரத்தை கடக்கவைப்பதில் மிகச் சிறந்த படைவீரன் போன்றவரும், சம்சாரக் கடலுக்கு பயந்தவர்களின் அச்சத்தைப் போக்கடிப்பவரும், தாமரைக் கண்ணரும், சுகத்தை அருள்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.