திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடி இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ரூ.300 சிறப்பு தரிசனத்தில் வரும் பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
எனவே இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வைகுந்தம் அறைகளில் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். திருப்பதியில் நேற்று 62,925 பேர் தரிசனம் செய்தனர். 36,297 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.77 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.23 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.