ஆன்மிகம்

வெற்றியை தரும் அனுமனின் அற்புத மந்திரங்கள்

அனுமனின் முழு அருளையும் பெறுவதற்கு, பலவிதமான அனுமன் மந்திரங்கள் உள்ளன

ராமரின் தீவிர பக்தனாகவும், அஞ்சனை மைந்தனாகவும் போற்றப்படுபவர், ஆஞ்சநேயர். இவர், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள்புரிவதுடன், ராமரை நினைக்கும் பக்தர்களுக்கும் துணையாக இருப்பார். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு, செந்தூர காப்பு அணிவித்து, வெற்றிலை, வடை மாலை சாற்றி வழிபட்டால் சகல சங்கடங்களையும் நீக்கி சந்தோஷங்களை வாரி வழங்குவார்.

அனுமனின் முழு அருளையும் பெறுவதற்கு, பலவிதமான அனுமன் மந்திரங்கள் உள்ளன. அவற்றை முறையாக பாராயணம் செய்து வழிபட்டால் வாழ்வில் வெற்றி கிடைக்கும், ஆரோக்கியம் சீராகும், எதிரி பயம் நீங்கும், தைரியம் அதிகரிக்கும்.

அனுமன் மந்திரத்தை தினமும் 11 முதல் 21 முறை காலையிலும் மாலையிலும் உச்சரிப்பது தடைகளை நீக்கி, மன தைரியத்தை அளித்து, தொழில் மற்றும் வாழ்க்கையில் வெற்றியைத் தரும்.

அனுமன் மூல மந்திரம்:-

ஓம் ஸ்ரீ ஹனுமந்தாய நமஹ

அனுமன் காயத்ரி மந்திரம்:-

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி

தன்னோ ஹனுமத் பிரசோதயாத்

அனுமன் பீஜ மந்திரம்:-

ஓம் ஐம் ப்ரீம் ஹனுமதே ஸ்ரீ ராம தூதாய நமஹ

காரிய சித்தி அனுமன் மந்திரம்:-

த்வமஸ்மிந் கார்ய நிர்யோகே ப்ரமாணம் ஹரிஸத்தம

ஹனுமான் யத்ன மாஸ்தாய துகா க்ஷய கரோ பவ