ஆன்மிகம்

வேலைகள் கிடைக்க விளக்கேற்றி வழிபடுங்கள்! விதியை மாற்றும் காளிகாம்பாள்- தல வரலாறு

இக்கோவிலில் விளக்கேற்றி வழிபட்டால் திருமண தடை, கடன் பிரச்சனை, எதிரிகள் தொல்லை நீங்கும்.

சென்னை பர்ரிஸ் கார்னர், தம்பு செட்டி தெருவில் இருக்கும் பிரபலமான காளிகாம்பாள் கோவில் சக்தி வழிபாட்டின் முக்கியமான தலங்களில் ஒன்று.காளி என்றாலே பெரும்பாலும் அச்சத்திற்கு உள்ளாகுகிறார்கள். ஆனால் அவள் எவ்வளவு உக்கிரம் கொண்டு காட்சி தருகிறாளோ அதே அளவு மென்மையானவள், பசிக்கு அழும் ஒரு குழந்தையை கண்டதும் தாய் எப்படி கட்டி அனைத்து கொள்கிராளோ அது போல் அன்புடன் கூப்பிடக் குரலுக்கு ஓரடி வந்து அருள் தருவாள்.

நாம் வேண்டும் வாரங்களில் உண்மையும் நன்மையும் இருத்தல் வேண்டும். தீய எண்ணத்துடன் வேண்டி பூஜை செய்தால் அதற்க்கான தீய கர்மவினை நம்மை வந்து பற்றிக்கொள்ளும். ஆக, காப்பவளே நம்மை அழிப்பவளாக உருவெடுப்பாள் இந்த காளி.

மூலவர்: ஸ்ரீ காளிகாம்பாள் (காமாட்சி வடிவம்)

சுவாமி: காமதேஸ்வரர் (சிவன் வடிவம்)

பரிவார தெய்வங்கள்: விநாயகர்,முருகன், பிரத்தியங்கரா தேவி, துர்கை, காயத்திரி தேவி, மகாலட்சுமி, சரஸ்வதி.

தல வரலாறு:

காளிகாம்பாள் கோவில் சுமார் 1640-ஆம் ஆண்டில் விஜயநகர பேரசின் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. முதலில் இந்த கோவில் தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடத்தில் அமைந்திருந்தது.

அங்கு மீனவர்கள் அம்பிகையை "சென்னம்மன்" என்று வழிபட்டதாகவும், அதிலிருந்து தான் "சென்னை" என்ற பெயர் வந்ததாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.

1672-ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போரின் போது, கோட்டைக்குள் இருந்த கோவில் இடிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அம்மனின் சிலையை பாதுகாப்பாக எடுத்து வந்து தற்போதுள்ள தம்பு செட்டி தெருவில் புதிய கோவிலை கட்டினர். அதுதான் இன்றைய காளிகாம்பாள் கோவில். சுமார் 400 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.

உக்கிர காளியும் ஆதி சங்கரர் வருகையும்:

முதலில் உக்கிரமான காளி வடிவம் வழிபடப்பட்டது. பின்னர் ஆதி சங்கரர் வந்து சாந்தப்படுத்தி, சாந்த சொரூபமான காமாட்சி வடிவில் அமைத்ததாக கூறப்படுகிறது. அவர் இங்கு "அர்தமேரு ஸ்ரீ சக்கரம்" பிரதிஷ்டை செய்தார். அவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம் இன்றும் இருப்பது காணலாம்.

ஆதலால் இத்தலத்தில் அம்மன் "காளி" மற்றும் "காமாட்சி" ஆகிய இரு வடிவங்களின் சங்கமாக காட்சி தருகிறார். அதனால் தான் "காளிகாம்பாள்" என்ற பெயரும் வந்தது.

இக்கோவிலில் மூலவர் காளிகாம்பாள் நான்கு கரங்களுடன், சிங்க வாகனத்தில் வீற்றிருக்கிறார். அருகில் உற்சவர் காமாட்சி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.

சிவாஜி மன்னர் வழிபாடு:

17-ம் நூற்றாண்டு மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, 3 அக்டோபர் 1667 அன்று இங்கு வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. கோவிலின் உள்ளே அவர் வழிபட்டதின் புகைப்படங்கள் உண்டு.

யாதுமாகி நின்றாய் காளி:

மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரன்' இதழில் வேலை பார்கும்போது அடிக்கடி இங்கு வந்து தியானம் செய்தார். "யாதுமாகி நின்றாய் காளி" என்ற பாடல் இங்குதான் பிறந்ததாக சொல்லப்படுகிறது.

சிறப்பு:

ஆடி பூரம், நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற முக்கியமான நாட்களில் அம்மன் விழாக்கோலம் பூண்டு காட்சிதருவாள்.

திருமண தடை, கடன் பிரச்சனை, எதிரிகள் தொல்லை நீங்க இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேலைகள் மற்றும் தொழிலுக்கு ஆதாயமாக இக்கோவிலில் விளக்கேற்றி வழிபடுவது ஒரு சிறந்த மாற்றத்தை தரும் என்பது பலரும் அனுபவித்த ஒன்றாகும்.

நடைதிறந்திருக்கும் நேரம் :

காலை 6:00 மணி முதல் 12:00 மணிவரை

மாலை 4:30 மணி முதல் மணிவரை

ஓம் காளிகாம்பிகையே போற்றி போற்றி!