நரசிம்மர் என்றாலே மனித உடலும், சிம்ம முகமும் கொண்ட உக்கிர வடிவம் தான் அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால் பக்தர்கள் அழைத்ததும் அடுத்த நொடியே ஓடி வந்து அருள் செய்யும் கருணாமூர்த்தி என்பது பலருக்கும் தெரியாது. நரசிம்மர் வழிபாட்டில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களையும், நரசிம்மரின் அருளை பெற்றுத் தரும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
நரசிம்ம மகா மந்திரம்:-
ஓம் ஹ்ரீம் ஷெளமுகம் விரம் மஹாவிவ்னும்ஜ் வலந்தம் ஸர்வதோமுகம்
நரஸிம்ஹம் பீஷணம் பாத்ரம்மசிருத்யோர் மிருத்யம் நமாம்யஹம்
பொருள்: கோபமும் தைரியமும் கொண்ட மகாவிஷ்ணுவே, உனது வெப்பமும் நெருப்பும் எங்கும் பரவுகின்றன. நரசிம்ம பகவானே, நீ எங்கும் இருக்கிறாய். நீ மரணத்தின் மரணம். நான் உன்னிடம் சரணடைகிறேன்.
நரசிம்மர் பிரணாமம் மந்திரம்:-
நமஸ்தே நரசிம்மாய, பிரஹலாதாஹலாதா தாயினி ஹிரண்யகசிபோர் பஹ்சாஹ
சிலா தன்க நகல்லயே
இதோ நர்சிம்ஹ பரதோ நர்சிம்ஹோ, யதோ யதோ யமி ததோ நர்சிம்ஹ,
பஹிர் நர்சிம்ஹோ ஹிருதயே நர்சிம்ஹோ,
நர்சிம்ஹம் அதிம் சரணம் பிரபாப்தே
பொருள்: ஹிரண்யகசிபு என்ற அரக்கனின் மார்பு போன்ற கல்லில் உளி போன்ற நகங்களைக் கொண்டு பிளந்து, பிரஹலாத மகாராஜாவுக்கு மகிழ்ச்சியைத் தருபவரான நரசிம்ம பகவானுக்கு நமஸ்காரம்.
நரசிம்மர் இங்கேயும் அங்கேயும் இருக்கிறார். நான் எங்கு சென்றாலும் நரசிம்மர் என்னுடன் இருக்கிறார். என் இதயத்தில் இருக்கிறார், வெளியிலும் இருக்கிறார். எல்லாவற்றுக்கும் பிறப்பிடமாகவும், பரம புகலிடமாகவும் இருக்கும் நரசிம்மரை சரணடைகிறேன்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் தீராத கடன்கள், தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் ஆகியன தீரும். நெருக்கடியான, கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்கும்.
நரசிம்ம காயத்ரி மந்திரம் :-
ஓம் நரசிம்ஹாய வித்மஹி
வஜ்ரநாகாய தீமஹி
தன்நோ சிம்ஹ பிரசோதயாத்
வஜ்ர நாகாய வித்மஹி
திக்ஷ்ண தாமஸ்த்ரயா தீமஹி
தன்நோ நரசிம்மஹ பிரசோதயாத்
ஸ்ரீ நரசிம்ம மூல மந்திரம் :
உக்ரம் விரம் மஹா- விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
நர்ஸிம்ஹம் பீஷணம் பத்ரம் மிருத்யுர் மிருத்யும் நமாம் யஹம்
இந்த மந்திரம் அனைத்து கவச மந்திரங்களுக்கும் முதன்மையான கவச மந்திரமாக கருதப்படுகிறது. இந்த மந்திரத்தை சிறிய தகடு அல்லது மரப்பட்டையில் எழுதி, மடித்து, துளசி இலைகள் அல்லது மலர்கள் வைத்து நரசிம்மரின் பாதத்தில் வைக்க வேண்டும். இதோடு 16 வகையான பொருட்களை வைத்து நரசிம்மரை வழிபட்ட பிறகு அர்ச்சகர் பிராண-பிரதிஷ்டை செய்து நரசிம்மரை இந்த கவசத்தில் எழுந்தருளும்படி செய்வார்.
நரசிம்ம மந்திர பலன்கள் :-
நரசிம்ம மந்திரங்கள் அனைத்துமே கவச மந்திரத்திற்கு சமமானவை. எவர் ஒருவர் உச்சரிக்கிறாரோ அவரை கவசம் போல் காக்கும். இந்த மந்திரங்களை தொடர்ந்து சொல்லும் போது அதன் ஆற்றலை, பக்தர்கள் கண்கூடாக காண முடியும். கடன் பிரச்சனை, பண நெருக்கடி, நெருக்கடியாத சூழல், எல்லா வித கஷ்ட நேரங்களிலும் காக்கும்.