செய்திகள்

சென்னை ஏ.டி.பி. சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் யூகி பாம்ப்ரி

சென்னையில் நடைபெற்றுவரும் ஏ.டி.பி. சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் யூகி பாம்ப்ரி முன்னேறியுள்ளார். #YukiBhambri #ChennaiOpen

மாலை மலர்

சென்னை:

சென்னையில் நடைபெற்றுவரும் ஏ.டி.பி. சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் யூகி பாம்ப்ரி முன்னேறியுள்ளார்.

ஏ.டி.பி. சாலஞ்சர் டென்னிஸ் தொடர் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இத்தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரியும், மற்றொரு இந்திய வீரரான சித்தார்த் ராவத்தும் மோதினர்.

இப்போட்டியில் அதிரடியாக விளையாடி யூகி பாம்ப்ரி முதல் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற யூகி பாம்ப்ரி சென்னை ஏ.டி.பி. சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில் யூகி பாம்ப்ரி, ஜப்பானின் யசுடாகா உச்சியாமாவை எதிர்கொள்ள இருக்கிறார். #YukiBhambri #ChennaiOpen