லைக் பட்டனை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் பயனர்கள் மற்றொரு நபருக்கு $1 அனுப்ப அனுமதிக்கும் ஒரு அம்சத்தை X அறிமுகப்படுத்தியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை படைப்பாளிகள் டிப்ஸ் வழங்குவதை எளிதாக்கக்கடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் செயலியின் ஒரு புதிய அம்சத்தை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதன் மூலம், பயனர்கள் 'லைக்' பொத்தானை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் மற்றொரு நபருக்கு 1 டாலர் அனுப்ப முடியும்.
இது, பணம் செலுத்தும் முறையை அந்தத் தளத்தின் அன்றாட சமூக ஊடகத் தொடர்புகளுக்கு ஒரு நெருக்கத்தை உருவாக்கத்தை இது ஏற்படுத்துகிறது. இது குறித்து எலான் மஸ்க் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
எலான் மஸ்க் தனது X தளத்தில் ஒரு பதிவில் முன்மொழியப்பட்ட இந்த அம்சத்தை அறிவித்து, "லைக் பட்டனை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம், ஒருவருக்கு 𝕏 Money வழியாக $1 அனுப்பும் வசதியை சேர்த்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த அம்சம், பயனர்கள் ஒரு தனி கட்டணச் செயல்முறையைப் பின்பற்ற வேண்டிய அவசியமின்றி, படைப்பாளிகளுக்கு வெகுமதி அளிப்பதற்கும், தாங்கள் விரும்பும் சமூகவலைதள பக்கங்களுக்கு நிதியுதவி அளிப்பதை இந்த அம்சம் எளிமையாக்கியுள்ளது.
இருப்பினும், இந்த அம்சம் எப்போது எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தபடும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
முன்மொழியப்பட்ட அமைப்பின் கீழ், பயனர்கள் 'லைக்' பொத்தானை அழுத்திப் பிடிப்பதன் மூலம் ஒரு பதிவின் ஆசிரியருக்கு $1 செலுத்த முடியும். இந்தப் பரிவர்த்தனை, தளத்தின் நிதிச் சேவையான 'எக்ஸ் மணி' (X Money) மூலம் செயல்படுத்தப்படும்.