இஸ்ரேல் மற்றும் வளை குடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
அவ்வ்கையில் கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் கடுமையான சேதத்தை விளைவித்துள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், "நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கில், கத்தாரையும் அதன் அண்டை நாடுகளையும் ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருவது கண்டிக்கத்தக்கது என கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.