உலகம்

உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் 2026: அறிவியலின் துணையோடு மக்களை பாதுகாப்போம்- சர்வதேச அமைப்பு அழைப்பு!

கடந்த 2025-ஆம் ஆண்டில் "தூய்மையான காற்று, ஆரோக்கியமான மக்கள்" எனும் கருப்பொருளில் உலக அளவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

உலகம் முழுவதிலும் உள்ள அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களின் பிராந்தியச் சூழலுக்கு ஏற்ற விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு சர்வதேச சுற்றுச்சூழல் சுகாதார கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 26-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் சுகாதார தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026-ஆம் ஆண்டின் சர்வதேச விழிப்புணர்வு நாளுக்கான சிறப்பு மையக்கருத்து மற்றும் வழிகாட்டுதல்களை அமைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டின் மையக்கருத்து

இந்த ஆண்டிற்கான சர்வதேச மையக்கருத்தாக "சுற்றுச்சூழல் சுகாதாரம்: சமூகங்களைப் பாதுகாக்க அறிவியலுடன் இணைந்து நிற்போம்" என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிவியல் சார்ந்த முடிவு எடுக்கும் கொள்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆண்டின் கருப்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

ஆராய்ச்சிகளை வெறும் தத்துவங்களாக நிறுத்தாமல், அவற்றை நடைமுறைச் சட்டங்களாகவும், அரசுக் கொள்கைகளாகவும், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளாகவும் மாற்றுவதில் சுற்றுச்சூழல் சுகாதார வல்லுநர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். ஆதாரங்களின் அடிப்படையில் செயல்படும் பொது சுகாதார நடவடிக்கைகள் மட்டுமே சமூகத்திற்கு முழுமையான பாதுகாப்பை அளிக்கும் என்பதும், அறிவியல் சான்றுகளே ஆபத்துகளிலிருந்து மக்களைக் காக்கும் முதன்மை அரண் என்பதும் இந்த ஆண்டின் முக்கியச் செய்திகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2025-ஆம் ஆண்டில் "தூய்மையான காற்று, ஆரோக்கியமான மக்கள்" எனும் கருப்பொருளில் உலக அளவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காற்று மாசுபாட்டைக் குறைத்தல், சுவாசப் பிரச்சைனைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல் போன்ற நோக்கங்களுடன் பள்ளி விழிப்புணர்வு முகாம்கள், கருத்தரங்குகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

உலகளாவிய பங்களிப்பிற்கான அழைப்பு

2026-ஆம் ஆண்டின் விழிப்புணர்வு தினத்தைக் கொண்டாடும் பொருட்டு, உலகம் முழுவதிலும் உள்ள அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களின் பிராந்தியச் சூழலுக்கு ஏற்ற விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அமைப்புகள் நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை IFEH இணையதளத்தில் இலவசமாகப் பதிவேற்றம் செய்து உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT