Strait of Hormuz 
உலகம்

ஈரானிய எண்ணெய் கப்பல்களை Strait of Hormuz வழியாக செல்ல அனுமதித்து வருகிறோம் - அமெரிக்கா

ஈரானிய எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதித்து வருகிறோம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசென்ட் பேசியுள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதிக்காதது இதற்கு முக்கிய காரணமாகும்.

உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த சிறிய கடல் வழித்தடம் வழியாகவே நடைபெறுகிறது.

இந்நிலையில், ஈரானிய எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதித்து வருகிறோம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசென்ட் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி குறித்து பேசிய ஸ்காட் பெசென்ட், "ஈரானிய எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதித்து வருகிறோம். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை சீராக்க இதை அனுமதிப்பதாகவும், ஏற்கனவே இந்தியா, சீனா நாடுகளுக்கு ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்கிறது" என்று தெரிவித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி மருத்துவரும் நிலையில், அவ்வழியே ஈரான் கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கி வருகிறோம் என்று அமெரிக்கா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT