ஹார்முஸ் திறந்தே உள்ளது.. எதிரிகளுக்கும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் அனுமதி கிடையாது - ஈரான் | IRGC

ஹார்முஸ்
ஹார்முஸ்
Published on
Summary

உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த சிறிய கடல் வழித்தடம் வழியாகவே நடைபெறுகிறது.

அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதிக்காதது இதற்கு முக்கிய காரணமாகும்.

உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த சிறிய கடல் வழித்தடம் வழியாகவே நடைபெறுகிறது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படவில்லை என்றும் ஆனால் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "இந்த ஜலசந்தி சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு திறந்தே உள்ளது. ஆனால், எதிரிகளான அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே இது மூடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அந்தப் பாதையை பாதுகாப்பாக வைத்திருக்க  தங்களது போர்க்கப்பல்களை அனுப்பி அமெரிக்காவிற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக 92,700 மெட்ரிக் டன் LPG எரிவாயுவுடன் ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய 2 இந்திய கப்பல்கள் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

X

Maalai Malar
www.maalaimalar.com