90 ஆண்டுகள் பழமையான ஒவியம் ஒன்றில் பழங்குடியின மனிதர் ஒருவர் தன் கைகளில் உள்ள கருமையான, செவ்வக வடிவப் பொருளை உன்னிப்பாகப் பார்ப்பதுபோன்ற ஒவியம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பொருள் ஸ்மார்போனைப் போன்று தோற்றத்தைக் கொண்டிருப்பதால் , அந்த ஓவியம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வருகிறது
இந்த ஓவியமானது 17-ஆம் நூற்றாண்டின் மாசசூசெட்ஸில் பழங்குடி மக்களுக்கும் ஆங்கிலேயக் குடியேறிகளுக்கும் இடையே நடந்த ஒரு சந்திப்பை விவரிப்பதாக அமைந்துள்ளது
ஓவியத்தில் ஸ்மார்ட்போன் இருந்ததிற்கு எந்தவிதமான சாத்தியமான சான்றுகளும் இல்லை . அது ஒரு சிறிய கை கண்ணாடியாக இருந்திருக்கலாம் என்றும் ,ஏனெனில் அந்த காலகட்டத்தில் வணிகத்திற்காக பல பொருட்களை விற்பனை செய்துவந்த நிலையில் அவர் கையில் வைத்திருப்பது கண்ணாடியாகவே இருக்கலாம் என்றும் சிலர் வாதிடுக்கின்றனர்.
இந்த ஓவியமானது தற்போது மாசசூசெட்ஸ் காமன்வெல்த் மாநில அலுவலகக் கட்டிடமாக உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் பிரதான தபால் நிலையத்திற்காக உருவாக்கப்பட்ட ஆறு சுவரோவியங்களில் ஒன்றாகும் .ரொமானோ என்பவர் இந்த ஒவியத்தை 1937-ல் நிறைவு செய்தார். அப்போதைய பெரும் பொருளாதார மந்தநிலையின் போது கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய அமெரிக்க அரசாங்கத் திட்டமான ஃபெடரல் கலைத் திட்டம் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்தது.
ஸ்மித்சோனியன் தேசிய அஞ்சல் அருங்காட்சியகத்தின்படி ரொமானோ தனது மாணவர்களுடன் இணைந்து அந்தச் சுவரோவியத்தை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது
மேலும், 1630-களில் தற்போதைய மாசசூசெட்ஸில் உள்ள அகாவாம் பகுதியில், ஆங்கிலேயக் குடியேறிகளுக்கும் போகும்டக் மற்றும் நிப்மக் பழங்குடியினருக்கும் இடையே நடந்த நிகழ்வுகளைத் தழுவி அது உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஓவியமானது இன்றைய ஸ்ப்ரிங்ஃபீல்டின் நிறுவனர்களில் ஒருவரான வில்லியம் பின்சன் என்பவரால் வரையப்பட்டதாகும்
குறிப்பாக பின்சன், 1636-ல் அகாவாம் மக்களிடமிருந்து நிலத்தை வாங்கிய பிறகு, அப்பகுதியில் ஒரு வர்த்தக நிலையத்தை நிறுவினார் பின்னாளில் சுவரோவியங்களை உருவாக்கும்போது, ரொமானோ உள்ளூர் வரலாற்றாசிரியர் ஹாரி ஆண்ட்ரூஸ் ரைட் மற்றும் எழுத்தாளர் எஸ்தர் ஃபோர்ப்ஸ் ஆகியோரிடம் ஆலோசனை பெற்றதாகக் கூறப்படுகிறது.
17 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான அப்பகுதியின் வரலாற்றையும் வளர்ச்சியையும் சித்தரிப்பதே அவருடைய பரந்த நோக்கமாக இருந்திருக்கிறது