அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள மாமத் குகை உலகின் மிக நீளமான குகையாகும், இது பிரத்தேயகமான நிலத்தடி அமைப்பை கொண்டுள்ளதால் 1981ஆம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த குகைக்கு தினமும் மக்களின் வருகை அதிகரித்து வருவது ஒருபுறம் இருக்க, குவியும் கழிவுகளும் மறுபக்கம் அதிகரித்து வருகின்றன.
குகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் ஆடைகளில் இருந்து உதிரும் நார்கள், தலைமுடி, சிறிய குப்பைகள் உள்ளிட்டவை குகையின் பாதைகளில் படிந்து சிறிய உருண்டைகளாக குவிந்து கழிவுகளாக மாறியுள்ளன. இந்த குப்பை குவியல்கள் நகைச்சுவையாக லின்ட் பன்னிகள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக லின்ட் பன்னிகள் என்பதற்கு சாக்லெட் என பொருள்படும்.
குகையை காண வரும் சுற்றுலா பயணிகள் விட்டுச்செல்லும் குப்பைகள் அனைத்தும் காலப்போக்கில் உருண்டை வடிவில் ஒன்றாகிவிடுகின்றன. இவை கண்ணுக்கு சாதாரண பஞ்சுத் துண்டுகளைப் போலத் தெரிந்தாலும், இவை குகையின் இயற்கைச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக குகையின் பாறைகள் மற்றும் பழமையான குகை அமைப்புகளின் நிறத்திலும் கடுமையான சேதரத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.
பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்பொருட்கள் மற்றும் குகைச் சுவர்களில் உள்ள வரலாற்றுச் சுவடுகளின் மீதும் இந்தக் கழிவுகள் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க இந்த குகையில் சேர்ந்திருக்கும் கழிவுகளை துடைப்பம் முதல் ஹெப்பா வாக்யூம் வரை பயன்படுத்தி குகையை பாதுகாக்கும் பணியில் தேசிய குகை ஆய்வு சங்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பாறைகளில் படிந்திருக்கும் துல்லியமான துகள்களை உயர் திறன் கொண்ட ஹெப்பா வாக்யூம் கருவிகளைப் பயன்படுத்தி, குகையின் சுற்றுலா பாதைகளில் படிந்திருக்கும் நார்கள் மற்றும் பிற மனிதக் கழிவுகளை அவர்கள் கவனமாக அகற்றி வருகின்றனர்.
குகையின் மென்மையான பாறை அமைப்புகள் மற்றும் இயற்கை உருவாக்கங்களை சேதப்படுத்தாமல் கழிவுகளை அகற்ற வேண்டிய நிலை இருந்ததால் தன்னார்வலர்கள் குப்பைகளை அகற்ற கவனமுடன் கையாண்டத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சுற்றுலா பயணிகளுக்கு குகையை பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டே இந்த இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மனிதர்கள் விட்டுச் செல்லும் மிகச்சிறிய கழிவுகள்கூட, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வரும் இயற்கை அதிசயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு மாமத் கேவின் லின்ட் பன்னிகள் ஒரு கடும் எச்சரிக்கையாக மாறியுள்ளன.