அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும், மற்ற உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடிவு செய்தார். அவருடைய விருப்பதற்கு இசைவு காட்டாத நாடுகளுக்கு பரஸ்பர வரி என்ற வகையில் கூடுதல் வரி விதித்தார். இதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டிரம்பின் வரி விதிப்பு செல்லாது என்று தெரிவித்ததுடன், வசூலிக்கப்பட்ட வரியை திருப்பி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத் தவிர்த்து அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை குறைக்கும் வகையில் நிர்வாக உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை இன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்யுள்ளது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் ஏறக்குறைய அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் 14-வது சட்டத்திருத்தம் குறித்த நீண்டகால விளக்கத்தை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தை தன்னிச்சையாக அமெரிக்க குடியுரிமை பெறும் வகையில் சட்டம் உள்ளது. ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிக விசாவிலோ வந்திருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்று நிர்வாக உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், அதில் பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியேறியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பித்திருந்தார். தற்போது அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே, கீழவை நீதிமன்றம் உறுதி செய்த உத்தரவை உச்சநீதிமன்றத்தில் 6-3 என்ற நீதிபதிகளின் தீர்ப்புகள் அடிப்படையில் உறுதி செய்துள்ளது.