உலகம்

ஐ.நா.வில் பேச்சுவார்த்தை: ஈரான், ரஷிய வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் முக்கிய ஆலோசனை!

உக்ரைன் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகள் குறித்து இருதரப்பும் ஆலோசித்துள்ளன.

டெல்லியில் இந்த மாத தொடக்கத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, இந்த உயர்மட்ட சந்திப்புகள் நடந்துள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷிய மற்றும் ஈரான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

இருதரப்பு உறவுகள் ஆய்வு

ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடனான சந்திப்பின் போது, இந்தியா - ரஷியா இடையிலான சிறப்புமிக்க மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இரு தலைவர்களும் வர்த்தகம், சக்தித் துறை மற்றும் சர்வதேச அரசியல் சூழல்கள் பற்றி கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். உக்ரைன் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகள் குறித்து இருதரப்பும் ஆலோசித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யத் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர், வளைகுடா பகுதியில் தற்போது நிலவி வரும் பாதுகாப்பு சூழல் மற்றும் மோதல்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார். அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில் தொடர்பில் இருக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் தொடர்ச்சி

டெல்லியில் இந்த மாத தொடக்கத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, இந்த உயர்மட்ட சந்திப்புகள் நடந்துள்ளன. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையேயான பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து கூட்டத்தில் முக்கியத்துவம் அளித்து பேசப்பட்டது.

SCROLL FOR NEXT