பிரிட்டனில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. அவரது அமைச்சகத்தில் ஜான் ஹீலி பாதுகாப்புத்துறை அமைச்சராக செயல்பட்டார்.
இந்நிலையில் . நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அதிருப்தி தெரிவித்து ஜான் ஹீலி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது ஸ்டார்மர் அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ரஷியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க பாதுகாப்புத்துறைக்கு கூடுத நிதி ஒதுக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு ஸ்டார்மர் அரசு செவி சாய்க்கவில்லை என தெரிகிறது.
பிரதமர் ஸ்டார்மரிடம் ஹீலி வழங்கிய ராஜினாமா கடிதத்தில், "தற்போதைய அபாயகரமான சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையானதை விட மிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.
ராணுவத்திற்குப் போதுமான வளங்களை வழங்காத எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் ஏற்க மாட்டேன் என்று உங்களுக்கு முன்பே எச்சரித்திருந்தேன்" என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில் ஹீலியின் ராஜினாமா அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.