இங்கிலாந்து பெண் மந்திரி ராஜினாமா: பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தல்

நாட்டிற்குச் சரியானதைச் செய்யுமாறு ஸ்டார்மரை ஃபான்புல்லே வலியுறுத்தினார்.
இங்கிலாந்து  பெண் மந்திரி ராஜினாமா: பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தல்
Published on

உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்து ஸ்டார்மர் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்த பெண் அமைச்சர் ராஜினாமா செய்ததுடன், பிரதரையும் பதவி விலக வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டார்மர் அமைச்சரவையில் வீட்டுவசதி, சமூகங்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் மியாட்டா ஃபான்புல்லே. இவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன் "நாட்டிற்கு் சரியானதை் செய்யுமாறு" ஸ்டார்மரை வலியுறுத்தியதோடு, பதவி விலகுவதற்கான காலத்தையும் நிர்ணயிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இடதுசாரி கட்சியை சேர்ந்தவராக கருதப்படும் ஃபான்புல்லே, "தனது சேவை குறித்துப் பெருமிதம் கொள்வதாகவும், ஆனால் வாக்காளர்களால் வழங்கப்பட்ட மாற்றத்திற்கான தொலைநோக்கு, வேகம் மற்றும் ஆணையின்படி அரசாங்கம் செயல்படவில்லை" என்றும் கூறினார்.

"மேலும், நமது கொள்கை தெளிவுடனும், நமது நம்பிக்கைகளில் உறுதியுடனும் ஒரு தொழிலாளர் கட்சியாக நாம் ஆட்சி செய்யவில்லை," என்றும் அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com