உலகம்

நேபாளத்தின் திரிசூலி நீர்மின் நிலைய சுரங்கத்தில் இருந்து 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு

திரிசூலி நீர்மின் நிலைய சுரங்கப் பாதைக்குள் இருந்து மனிதக் குரல்கள் கேட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் ​சுரங்கப்பாதைக்குள் சென்ற நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் 2 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அங்கு நீர்மின் நிலையங்களின் சுரங்கப்பாதைகளில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இதில் நேபாளத்துக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீட்புக்குழுக்கள் உதவி வருகின்றன. சுரங்கப் பாதைகளை அடைத்துள்ள சேறு-இடிபாடுகளை அகற்றுவதற்கு கனரக எந்திரங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிசூலி 3-ஏ நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் இருந்து 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சஞ்சய் சா, கபீர் மஹர்ஜன் என தெரிய வந்தது.

அவர்கள் எந்திரப் பிரிவு மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வந்தனர். மீட்கப்பட்ட அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே திரிசூலி நீர்மின் நிலைய சுரங்கப் பாதைக்குள் இருந்து மனிதக் குரல்கள் கேட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த சுரங்கத்தில் சுமார் 40 பேர் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பாராளுமன்ற எம்.பியும், மீட்புப்பணியில் ஈடுபட்டு வருபவருமான ராம் நியு பனே கூறும்போது, சுரங்கப் பாதைக்குள் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட குரல்கள் கேட்டுள்ளது. பயப்பட வேண்டாம்.

நாங்கள் உங்களை மீட்கிறோம் என்று மீட்புக் குழுவினர் கூறியபோது, ​​உள்ளிருந்து அதற்கான பதில் கிடைத்தது. சுரங்கப் பாதைக்குள் இருந்து மக்கள் பேசுவது குறித்த தகவல் கிடைப்பது ஒரு நம்பிக்கைக்குரிய அறிகுறியாகும்.

அங்கு சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இதற்கிடையே அந்த சுரங்கத்தில் இருந்து ஒரு தொழிலாளியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் ​சுரங்கப்பாதைக்குள் சென்ற நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் 2 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.

SCROLL FOR NEXT