அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் ஜமைக்கா எஸ்டேட்ஸ் என்ற இடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் குழந்தை பருவ வீடு இருந்துள்ளது. டியூடர் பாணியில் கட்டப்பட்ட இந்த வீட்டை டிரம்பின் தந்தை பிரெட் டிரம்ப் கடந்த 1940-ம் ஆண்டு கட்டியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் தனது 4 வயது வரை இந்த வீட்டில் வசித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மற்றொரு பெரிய வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
டிரம்பின் குழந்தை பருவ வீட்டை ஐந்து படுக்கையறைகள் மற்றும் மூன்று குளியலறைகளைக் கொண்ட சுமார் 3,100 சதுர அடி பரப்பளவு கொண்டது.
பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாததால் வீடு முழுவதும் பூஞ்சைகள் படிந்து, வீடு கடுமையாக சேதமடைந்திருந்தது. கடந்த ஆண்டு டாமி லின் என்ற கட்டுமானத் தொழிலதிபர் இந்த வீட்டை 8.35 லட்சம் டாலர்களுக்கு வாங்கியுள்ளார்.
இந்த வீட்டை வாங்கிய லின், சுமார் 5 லட்சம் டாலர் செலவில் 8 மாதங்கள் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்றன.
இதில் நவீன சமையலறை, மரத்தால் செய்யப்பட்ட தரைத்தளம், குளியலறைகள் புதுப்பிக்கப்பட்டது. பழமையை பிரதிபலிக்கும் வகையில் வீட்டின் வெளிப்புற தோற்றம் மட்டும் அப்படியே இருந்தது.
டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, 2017-ம் ஆண்டு இந்த வீடு 21.4 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. பின்னர், டிரம்புடன் தொடர்புடைய நினைவுப் பொருட்களுடன் இந்த வீடு ஏர்பிஎன்பி மூலம் வாடகைக்கும் விடப்பட்டது.
தற்போது, டிரம்பின் குழந்தைப் பருவ வீடு, புதுப்பிக்கப்பட்டு சுமார் 2 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ19.1கோடிக்கு மதிப்புக்கு விற்பனையாகியுள்ளது. ஆனால், இந்த வீட்டை வாங்கியவர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.