

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப், ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்றினார். இனிமேல் ஒன்டாரியோ ஏரி, அமெரிக்கா ஏரி (Lake America) என பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டார்.
இதனால் Alphabet, அமெரிக்கா ஏரி என்ற அழைக்க முடிவு செய்தது. இதன் அடிப்படையில் ஆப்பிள் மேப்ஸ் (APPLE Maps) ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரி என மாற்றியுள்ளது. இனிமேல் அமெரிக்க பயனர்கள் அமெரிக்கா ஏரி என்பதை பார்க்க முடியும். அதேவேளையில் கனடா நாட்டின் பயனர்கள் ஒன்டாரியோ ஏரி என பார்க்க முடியும். இரண்டு நாட்டிற்கு வெளியில் இருந்து இரண்டு பெயர்களிலும் பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளது.
அதேபோல் மெக்சிகோ வளைகுடா என்பதை அமெரிக்கா வளைகுடா என பார்க்க முடியும்.
வட அமெரிக்காவின் ஐந்து பெரும் ஏரிகளில் (Great Lakes) ஒன்றான ஒன்டாரியோ ஏரி குறித்து டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவில், அந்த ஏரியை அமெரிக்கக் கூட்டாட்சி நிர்வாகம் பயன்படுத்தும் முறைக்கு மட்டுமே பொருந்தும். மாறாக கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் அந்த ஏரியை எவ்வாறு அழைக்கின்றன என்பதை இது கட்டுப்படுத்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.