உலகம்

Iran War| ஈரான் பாராளுமன்ற சபாநாயகருடன் பேச்சுவார்த்தை- டிரம்ப் தகவல்

ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியமைப்புடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

போர் நிறுத்தம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார். ஆனால் அதை ஈரான் மறுத்து உள்ளது. அமெரிக்காவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் மூலம் அமெரிக்காவிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கான கோரிக்கை மட்டுமே பெறப்பட்டது என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாபுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியமைப்புடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் பெரும் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. ஆனால் ஏதேனும் ஒரு காரணத்தினால் விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாக திறக்கப்படாவிட்டால் ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை முழுமையாக அழிப்போம் என்றார்.