Mary Trump: ஆட்சி மாற்றம் ஈரானில் அல்ல, அமெரிக்காவில் தான் வரும்.. டிரம்ப்-ஐ விளாசிய அண்ணன் மகள்

ஈரானில் குண்டு வீசுவது அந்நாட்டு மக்களை விடுவிப்பதற்காக அல்ல, மாறாக டிரம்பின் தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே.
Mary Trump: ஆட்சி மாற்றம் ஈரானில் அல்ல, அமெரிக்காவில் தான் வரும்.. டிரம்ப்-ஐ விளாசிய அண்ணன் மகள்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அண்ணன் மகள் மேரி எல். டிரம்ப். இவர் பிரபல மருத்துவ உளவியலாளர் ஆவார்.

ஈரான் போருக்கு மத்தியில் மேரி டிரம்ப் யூடியூப் சேனல் வாயிலாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, "டொனால்ட் விரைவில் ஒரு ஆட்சி மாற்றத்தைக் காண்பார். ஆனால் அது ஈரானில் அல்ல, இங்கே அமெரிக்காவில் நடக்கும். இங்கே ராஜாக்கள் யாரும் இல்லை என்பதை அவர் நினைவில் கொள்வது நல்லது.

ஈரானில் குண்டு வீசுவது அந்நாட்டு மக்களை விடுவிப்பதற்காக அல்ல, மாறாக டிரம்பின் தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே.

இந்தத் தேவையற்ற போரால் கோடிக்கணக்கான டாலர்கள் வீணாவதோடு, எண்ணற்ற மனித உயிர்களும் ஆபத்தில் உள்ளது" என்று பேசியுள்ளார்.

மேலும், டிரம்ப் தற்போது கடுமையான அரசியல் நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், அந்த அவமானத்தில் இருந்து தப்பிக்கவே இத்தகைய போர் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் மேரி ட்ரம்ப் தனது விமர்சித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்ப்க்கு எதிராக அமெரிக்கா முழுவதும் "இங்கு ராஜாக்கள் இல்லை" என்ற கருப்பொருளில் 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com