Iran War | அடுத்து மக்களுக்கான உள்கட்டமைப்புகள்தான்: ஈரானுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்..!

ஈரானில் உள்ள எண்ணெய் வளங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த 15 நாள் காலக்கெடு நிர்ணயித்துள்ள டிரம்ப், புதிய மிரட்டல் விடுத்துள்ளார்
trump
trump
Published on

ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது. ஈரான் உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அம்சங்கள் அடங்கிய போர் நிறுத்த திட்டத்தை அறிவித்தார். இதற்காக 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். அதற்குள் ஈரான் பணிந்து வரவில்லை என்றால் எண்ணெய் வளங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே எண்ணெய் போக்குவரத்திற்கு ஈரானின் முக்கிய முனையமாக திகழும் கார்க் தீவை கைப்பற்றப்போவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஈரான் விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்வரவில்லை என்றால், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மற்றும் மக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என புது அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் 31-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானும் தாக்குப்பிடித்து பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com