Thailand 
உலகம்

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற வாகனம் மோதி 8 பௌத்த துறவிகள் பலி

பெற்றோரின் பிக் அப் டிரக் வாகனத்தை அவர்களுக்கு தெரியாமல் ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது.

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய பிக் அப் டிரக் மோதி 8 பௌத்த துறவிகள் பரிதாபமாகப் பலியான சோகம் அரங்கேறியுள்ளது.

விபத்து

தாய்லாந்தின் Ubon Ratchathani மாகாணத்தில் இருந்து Mukdahan மாகாணத்தில் உள்ள Don Tan மாவட்டத்தை நோக்கி 35 பௌத்த துறவிகளும், அவர்களது 5 சீடர்களும் என மொத்தம் 40 பேர் நடைப்பயணம் சென்றனர்.

துறவிகள் முக்தஹான் மாகாணத்தில் துறவிகள் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே 11 வயது சிறுவன் ஓட்டி வந்த பிக் அப் டிரக் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேராக துறவிகள் கூட்டத்தின் மீது மோதியது.

பாதிப்பு

மோதிய வேகத்தில் 5 துறவிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக பலியாயினர்.

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 துறவிகள் உயிரிழந்தனர்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த எஞ்சிய 10 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருட்டு

விபத்தை ஏற்படுத்திய 11 வயது சிறுவன், தனது பெற்றோரின் பிக் அப் டிரக் வாகனத்தை அவர்களுக்கு தெரியாமல் ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது.

சிறுவனை காவல்துறையினர் காவலில் எடுத்துள்ளனர். சிறுவனின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.