மெக்டொனால்டு நிறுவனம் 
உலகம்

ரஷியாவில் 850 உணவகங்களை தற்காலிகமாக மூடிய மெக்டொனால்டு

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

மாலை மலர்

சிகாகோ:

உக்ரைன் மீது ரஷியா 14வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் ரஷியாவிற்கு ஈடுகொடுத்து வருகிறது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.

இந்நிலையில், ரஷியாவில் உள்ள 850 உணவகங்களையும் மெக்டொனால்டு நிறுவனம் தற்காலிகமாக மூடுகிறோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த உணவகங்களில் 62,000 பேர் பணிபுரியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதையும் படியுங்கள்...உக்ரைன்- ரஷியா சண்டை முடிந்தபின் மாணவர் உடல் இந்தியா கொண்டு வரப்படும்: கர்நாடக மாநில முதல்வர்