தென் ஆப்பிரிக்கா வெள்ளம் 
உலகம்

தென் ஆப்பிரிக்காவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரிப்பு

கனமழை காரணமாக டர்பனில் உள்ள சாட்ஸ்வர்த் நகரில் 70 ஆண்டு காலத்துக்கும் மேலாக உள்ள இந்துக் கோயில் முழுமையாக சேதமடைந்தது.

ஜோகனஸ்பெர்க்:

தென் ஆப்பிரிக்கா நாட்டின் டர்பன் மாகாணத்தில் கடந்த 11ம் தேதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அந்த மாகாணத்தின் குவாஹுலு-நடாலா நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நிலையில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டது.

வெள்ளம், நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்தன. சாலைகள் துண்டிக்கப்பட்டன.

இந்நிலையில், டர்பனில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.

மாயமான பலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...கொரோனா நோயாளிகள் தங்குவதற்கு மக்களை வீட்டை விட்டு வெளியேற்றும் சீன அரசு