ஈரான் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்  
உலகம்

குறுக்க இந்த கௌசிக் வந்தா!.. 23 பேருடன் சென்ற ஈரான் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்

வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு கடற்கொள்ளையர்கள் இந்தப் கப்பலை பயன்படுத்தக்கூடும்.

23 பேருடன் பயணித்த ஈரானிய மீன்பிடிப் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் பயணித்த கடத்தியுள்ளனர்.

சோமாலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பந்தர் பைலா மற்றும் ஹபுனா ஆகிய கடலோர நகரங்களுக்கு இடையே கடந்த அக்டோபர் 29 தேதி 'அஜினி' என்ற ஈரானிய மீன்பிடி கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது.

கடத்தல்

21 ஈரானியப் பணியாளர்கள் மற்றும் 2 சோமாலியப் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற அந்தப் கப்பலை வழிமறித்த 8 முதல் 12 சோமாலிய கடற்கொள்ளையர்கள் அதனை கடத்தியுள்ளனர்.

பணியாளர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எச்சரிக்கை

இந்த கப்பல் வர்த்தக கப்பல்கள் பயணிக்கும் முக்கிய பாதைகளை நோக்கி நகர்வதாக தெரியவந்துள்ளது.

எனவே வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு கடற்கொள்ளையர்கள் இந்தப் கப்பலை பயன்படுத்தக்கூடும் என்று இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு மையம் எச்சரித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் பிற நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் வேளையில் ஈரான் கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT