உலகின் முப்பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் இந்த வாரம் ஒன்று கூடுகின்றனர்.
சீனாவின் ஷென்சென் நகரில் வியாழக்கிழமை, நவம்பர் 19 அன்று நடைபெறும் ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் சீனா செல்கின்றனர். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களை வரவேற்று உபசரிக்க உள்ளார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மூவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். உச்சிமாநாட்டில் புதின் பங்கேற்பதை ரஷியா உறுதிப்படுத்தியது.
அமெரிக்காவும் ஏற்கனவே இதை உறுதிப்படுத்திய நிலையில் சீனாவும் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியுள்ளது.
மூன்று நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான முதல் முத்தரப்பு சந்திப்பு இதுவாகும்.
ஈரான் போர், மத்திய கிழக்கு சூழல், உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பு குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இருப்பினும், ரஷியா-உக்ரைன் போர் இந்த உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படாது என்பதை வெள்ளை மாளிகை ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் முப்பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் இந்த சந்திப்பு உலக அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.