

டிரம்ப் தனிப்பட்ட நிதி நலன்களுக்காக நாட்டின் நலனில் சமரசம் செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கும் அதிவநீவன செயற்கை நுண்ணறிவுக்கான சிப்களை ஏற்றுமதி செய்வதற்கு முந்தைய பைடன் அரசு தடை வித்திருந்தது. அமெரிக்காவின் அதிநவீன சிப்களை பயன்படுத்தி சீனா செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவை முந்தக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் அதன்பின் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், 2025 மே மாதம் சீனாவுக்கான அதிநவீன அமெரிக்க செயற்கை நுண்ணறிவு சிப்களை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தியிருந்த விதி தளர்த்தினார்.
இதன்மூலம் அமெரிக்க நிறுவனங்களின் அதிநவீன சிப்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது சுலபமானது.
இதில் குறிப்பாக அமெரிக்காவின் என்விடியா நிறுவனம் பெரும் பயன் அடைந்தது. அந்நிறுவனமே சீனாவுக்கு அதிகளவில் சிப்களை தடைக்கு முன்னரும் தடை தளர்த்தப்பட்ட பின்னரும் ஏற்றுமதி செய்து வந்திருக்கிறது.
இந்நிலையில் டிரம்ப், சீனாவுக்கு சிப் ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை தளர்த்திய அதே சமயம் என்விடியா நிறுவனத்தில் பெருமளவில் பங்குகளை வாங்கியுள்ளதாக அவரது நிதி பதிவுகளை ஆய்வு செய்த 'டிக்ளெப்டோக்ரசி' என்ற ஊழல் எதிர்ப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
அவர் 1 மில்லியன் முதல் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள என்விடியா பங்குகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆப்பிள், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பிற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் டிரம்ப் பங்குகளை வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
வரலாற்று ரீதியாகவே சீனா என்விடியாவின் ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. 2010 மற்றும் 2022க்கு இடையில், அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் கால் பங்கு சீனாவிலிருந்து வந்தது.
ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பும் உயர்ந்தது.
டிசம்பர் 2025ல், என்விடியா நிறுவனம் சீனாவிற்கு H200 சிப்களை விற்பனை செய்ய அனுமதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த முடிவு அறிவிக்கப்பட்ட நாட்களில், டிரம்ப் குறைந்தது மூன்று முறையாவது என்விடியா பங்குகளை வாங்கியுள்ளார்.
ஒவ்வொரு பரிவர்த்தனையின் மதிப்பும் 250,001 முதல் 500,000 டாலர் வரை இருந்தது. அவர் பதவியேற்றதிலிருந்து அந்த நிறுவனத்தின் பங்குகளில் டஜன் கணக்கான பரிவர்த்தனைகளை செய்துள்ளார் என்று நிதிப் பதிவுகள் காட்டுகின்றன.
ஏற்கனவே என்விடியா சிஇஓவாக இருந்த ஜென்சன் ஹுவாங் சீன பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டு தனது பதவியில் இருந்து விலகினார். ஆலீஸ் ஹுவாங் என்ற அப்பெண் சீன உளவாளியாக இருக்கலாம் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் சந்தேகம் எழுப்பி உள்ளன.
இந்த சூழலில் டிரம்ப் உடைய முந்தைய முடிவுகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் சர்ச்சை ஆகியுள்ளன.
என்விடியா உட்பட, ஒட்டுமொத்த செயற்கை நுண்ணறிவுத் துறைக்கும் பயனளிக்கும் அரசாங்க முடிவுகளில் டிரம்பின் தனிப்பட்ட நிதி நலன்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளனவா என்று டீக்ளெப்டோக்ரசி அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.