உலகம்

சிவந்த பூமி.. சூப்பர் எல் நினோவால் எல்லை மீறும் வெப்பம் - ஐநா வானிலை அமைப்பு எச்சரிக்கை

2027 பிப்ரவரிக்குள் உலகளவில் கூடுதலாக சுமார் 451,000 இறப்புகளை ஏற்படுத்தக்கூடும்

உலகெங்கிலும் தற்போது நிகழ்ந்து வரும் 'எல் நினோ' வலுப்பெற்று, ஒரு 'சூப்பர் எல் நினோ'வாக மாறி வருவதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் உலக வானிலை ஆய்வு அமைப்பு(WMO), இது 1950க்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த எல் நினோக்களில் ஒன்றாக மாறக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.

இது மனிதனால் உருவான காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

பசிபிக் பெருங்கடல் அதிக அளவு வெப்பத்தை வெளியிடுவதால், உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை வரும் நாட்களில் அசாதாரணமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவந்த பூமி

வானிலை ஆய்வாளர் ரியான் மேயால் வெளியிடப்பட்ட உலகளாவிய காலநிலை வரைபடத்தில், அமெரிக்காவைத் தவிர பூமி கிட்டத்தட்ட முழுவதும் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.

எல் நினோ தற்போது அதன் உச்சபட்ச வலிமையில் இருப்பதாகவும், அதன் விளைவுகள் பிப்ரவரி 2027 வரை நீடிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இயல்பை மீறும் வெப்பநிலை

மற்றொரு வானிலை ஆய்வாளரான ஸீக் ஹவுஸ்பாதர், நினோ 3.4 மண்டலத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 3.4°C அதிகமாகப் பதிவு செய்யப்பட்டு, முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்ததாகக் கூறினார்.

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பிராந்தியங்களில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 3.7°C என்ற சாதனை அளவிற்கு உயரக்கூடும் என்று உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.

எச்சரிக்கை

சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எல் நினோ நிகழ்வானது 2027 பிப்ரவரிக்குள் உலகளவில் கூடுதலாக சுமார் 451,000 இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT