அமெரிக்காவில் தினமும் போராட்டங்கள் நடைபெறுவதாகத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ அமெரிக்காவிலும் தினமும் போராட்டங்கள் நடக்கின்றன. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக் கூறி ஐ.நா. கண்டனத்தைப் மார்கோ ரூபியோ புறக்கணித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ, இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்களின் விமர்சனங்கள் குறித்துப் பேசியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டங்களின்போது காவல்துறை தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 20-க்கும் மேற்பட்ட ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ, ஐ.நா. நிபுணர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கினார். ஜனநாயக நாட்டில் பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இயல்பானவை என்றும், அமெரிக்காவிலும் கூட தினமும் பல போராட்டங்கள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மற்றும் அது தொடர்பான ஐ.நா. கண்டனங்கள் குறித்து அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய ரூபியோ, இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் வாஷிங்டன் தலையிடாது என்றார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து அந்த நாட்டு மக்களே முடிவு செய்வார்கள் என்றும், அதில் வெளிநாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.