உலகம்

டிரம்புடன் பொது விவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை - போப் லியோ

போப் ஆண்டவர், தற்போது 11 நாள் ஆப்பிரிக்கப் பயணத்தில் உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பொது விவாதத்தில் ஈடுபடுவது "தனக்கு துளியும் விருப்பமில்லாத ஒன்று" என்று போப் ஆண்டவர் லியோ தெரிவித்துள்ளார்.

தான் ஒரு ஆன்மிகத் தலைவரே தவிர அரசியல்வாதி அல்ல என்பதை அவர் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். கேமரூனில் இருந்து அங்கோலா செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்தார். அப்போது அவர், "டிரம்புடன் தனிப்பட்ட ரீதியில் விவாதம் செய்யத் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை. எனது கருத்துக்களை விமர்சித்த போதிலும், தொடர்ந்து அமைதியை மட்டுமே போதிப்பேன்" என்றார்.

போப் ஆண்டவர், தற்போது 11 நாள் ஆப்பிரிக்கப் பயணத்தில் உள்ளார். அங்கு நிலவும் மோதல்களைத் தீர்க்க அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT