

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே பத்து நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்று டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் ஹார்மூஸ் நீரிணை திறக்கப்படுகிறது என ஈரான் தெரிவித்தது.
இந்நிலையில், ஹார்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதால் சீன அதிபர் ஷி ஜின்பிங் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஹார்மூஸ் நீரிணையை திறக்கப்பட்டதில் சீன அதிபர் ஷி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள எனது சந்திப்பு ஒரு சிறப்பானதாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் அமையும். அதிபர் ஷியுடன் இருப்பதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்- பல சாதனைகள் நிகழ்த்தப்படும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.