சீனாவில் இருந்து தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்காக, இரண்டு பாகிஸ்தான் விமானிகள் சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரினை கற்று வருவதோடு, மேலும் விண்வெளி பயணத்திற்காக தங்களை தயார்படுத்தியும் வருகின்றனர்.
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில் ‘பெல்ட் அண்ட் ரோடு’ (Belt and Road) திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டமானது 2028-ஆம் காலகட்டத்தில் சீனாவின் சாங்-இ 8 என்ற திட்டத்தின் மூலம், நிலவுக்கு செல்ல இருக்கும் பாகிஸ்தானின் ரோவர் ஆகியவை செயல்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த திட்டத்திற்காக சீனா விஞ்ஞானிகளுடன் இணைந்து விண்வெளி திட்டம் மேற்கொள்வதற்காக பாகிஸ்தானை சேர்ந்த ஜிஷான் அலி மற்றும் குர்ரம் தாவூத் ஆகியோர் பெய்ஜிங்கில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தான் விமானிகளுக்கு சீனா அளித்து வரும் பயிற்சியில், சீன மொழியை கற்றுக்கொள்ளுதல், புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் சுழலுதல், உண்ணுதல், உறங்குதல் மற்றும் உபகரணங்களை பழுது பார்த்தல் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன.
சீனாவுடன் இணைந்து விண்வெளிக்கு செல்லும் இரண்டு பாகிஸ்தான் விமானிகளில் ஒருவர் மட்டுமே விண்வெளிக்கு செல்ல உள்ளதாகவும், அவர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் பாகிஸ்தான் விண்வெளி பயணத்தை மேற்பார்வையிடும் அமர் கிலானி தெரிவித்துள்ளார்.
மேலும் விண்வெளிக்கு செல்லும் வீரரின் பெயரை, அக்டோபர் மாதத்தின் இறுதியில் சீனா தெரிவிக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
சீனாவுடன் இணைந்து விண்வெளிக்கு செல்ல இருக்கும் பாகிஸ்தானியர்கள், ஏவுதலுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு திரும்ப மாட்டார் என்றும்;
மேலும் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பிய பின்பு, சீனாவில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே சொந்த நாட்டிற்கு திரும்புவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
விண்வெளிக்கு செல்ல உள்ள பாகிஸ்தான் விமானி விண்வெளிக்கு சென்றவுடன், விண்கலத்தை இயக்குவதற்கு பதிலாக ‘பேலோட் ஸ்பெஷலிஸ்ட்’ (PayLoad Specialist) ஆக செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.
பேலோட் ஸ்பெஷலிஸ்ட் வேலையை செய்யும் நபர், விண்வெளி சுற்றுப்பாதையில் பாகிஸ்தானின் அறிவியல் சோதனைகளை மேற்கொள்வார் என்றும் கிலானி கூறினார்.