உலகம்

புலியுடன் டிக்டாக் வீடியோ எடுத்த பாகிஸ்தான் இளைஞர் - திடீரென்று ஆவேசமடைந்து கடித்ததால் அதிர்ச்சி

பாகிஸ்தானில் உள்ள லாகூர் மாவட்டத்தில் பெண் புலி ஒன்றை ஃபயாஸ் மற்றும் ஹசன் ஆகியோர் தங்கள் பண்ணையில் வளர்த்து வந்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பூங்கா ஒன்றில் புலியுடன் விளையாட்டுத் தனமாக டிக்டாக் வீடியோ ஒன்று எடுத்த நபரை, புலி தாக்கியதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பாகிஸ்தானில் உள்ள லாகூர் மாவட்டத்தில் பெண் புலி ஒன்றை ஃபயாஸ் மற்றும் ஹசன் ஆகியோர் தங்கள் பண்ணையில் வளர்த்து வந்துள்ளனர்.

இவர்கள் அடிக்கடி புலி, சிங்கம், சிறுத்தை ஆகிய ஆபத்தான விலங்குகளுடன் டிக்டாக் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், லாகூரில் உள்ள பெண் புலியுடன் டிக்டாக் வீடியோ எடுப்பதற்காக, தால்ஹா என்ற 19 வயது இளைஞர் அங்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த இளைஞர் புலி அருகில் போய் நின்றபோது, புலி இளைஞரை பார்த்து ஆக்ரோசமாக நடந்து கொண்டு, அவரை தாக்கியது.

இதை வீடியோவாக எடுத்து கொண்டிருந்த நபர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த லாகூர் போலீசார், புலியின் உரிமையாளர்களான ஃபயாஸ் மற்றும் ஹசன் ஆகியோர்களை கைது செய்தனர்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து லாகூர் போலீசார் கூறுகையில், “டிக்டாக் மீதான விவகாரம் ஒரு மனித உயிரை விட முக்கியமானதாக இருக்க முடியாது.

பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை என்ற பெயரில் மனித உயிரை பணயம் வைக்க யாரையும் அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT