POK 
உலகம்

POK: பேரணி சென்றவர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு.. 8 பேர் பலி - இந்தியா கண்டனம்

இணைய சேவை முழுவதுமாக முகப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டது.

பாகிஸ்தான் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.

இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

போராட்டம்

மக்களின் உரிமைகளுக்காக அவாமி நடவடிக்கை குழு என்ற அமைப்பு அங்கு முன்னெடுக்கும் போராட்டங்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் கடுமையாக ஒடுக்கி வருகின்றனர்.

கடந்த மாதம் முதல் அங்கு போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் அக்குழுவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். அங்கு வாழும் மக்களுக்கும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் இணைய சேவை முழுவதுமாக முகப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டதால் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் வீதிகளில் இறங்கி போராடும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

துப்பாக்கிச்சூடு

இந்நிலையில் இன்று விலைவாசி உயர்வு, அடிப்படை உரிமைகள் மறுப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராவல்கட் நகரில் இருந்து முசாபர்நகருக்கு போராட்டக்காரர்கள் இன்று பேரணியாக செல்ல முயற்சித்தனர்.

சனோதி நகர் அருகே போராட்டக்காரர்களை தடுத்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மக்களவை விரட்ட முயன்றனர்.

பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் 8 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் பதற்றமான சூழ்ல் நிலவி வருகிறது.

இந்தியா கண்டனம்

இந்த தாக்குதலை கண்டித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ,

"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தற்போது வெடித்துள்ள போராட்டம் பல ஆண்டுகளாக அங்கு நிலவும் பாகிஸ்தான் அரசின் ஒடுக்குமுறையின் விளைவே ஆகும்.

மக்களுக்கு உணவு, மருந்துகள் வழங்குவதை நிறுத்துவதும், இணையத்தை முடக்கி வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும் பாகிஸ்தானின் கொடூரத் தன்மையைக் காட்டுகிறது" என்று சாடியுள்ளார்.

வெள்ளை மாளிகை போராட்டம்

அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தோரின் வம்சாவளியினர் வாஷிங்டனில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகை முன்பாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.