

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ளவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடைய போராட்டம் இன்று 22-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள், பள்ளி குழந்தைகள், பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் அரசு தங்களுக்கு சுதந்திரம், தங்களை பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதி என்பதை நீக்க வேண்டும் உள்ளிட்ட 38 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் பாகிஸ்தான் ஆக்கிரிமிப்பு காஷ்மீரில் உள்ள ராவலகோட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள எய்டுகாஹ் மைதானத்தில் போராட்டக்காரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, PoK-வை நீண்ட காலமாக பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கருத முடியாது. நாங்கள் இந்தியாவோடு வலுவான ஈடுபாட்டை கோருவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
ஆர்வலர் சர்தார் அமன் கான் உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்களால் இந்த எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தின் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் இரண்டு வார காலத் தடையை விதித்ததைத் தொடர்ந்து, இப்போராட்டம் மேலும் வலுவடைந்தது.
போராட்டக்காரர்கள் மத்தியில் அமன் கான் பேசும்போது "பாகிஸ்தான் நிர்வாகத்திலுள்ள காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. மேலும், பாகிஸ்தான் அந்தப் பகுதியைச் சார்ந்திருப்பதை விட, அந்தப் பகுதிக்குத்தான் பாகிஸ்தானின் தேவை அதிகமாக இருக்கிறது.
உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், அப்பகுதி மக்கள் உதவிக்காக இந்தியாவை நாடக்கூடும் அவ்வாறு செய்வது அப்பகுதியின் அரசியல் சூழலை மாற்றி அமைப்பதோடு, இஸ்லாமாபாத் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்றார்.