குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நேற்று இரவு நடத்திய டிரோன் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்பு தொட்டி தீப்பிடித்து எரிந்தது. இதனால் வானில் கரும்புகை சூழ்ந்தது. இதன் வீடியோ இணயத்தில் வைரலாகி வருகிறது.
இருப்பினும், தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும், விமான நிலையத்தின் பிற பகுதிகளுக்கு பாதிப்பு இல்லை என்றும் குவைத் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு மேலும் 6 டிரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக ரீதியான அனைத்து விமானப் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்கள் தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.
கடந்த மார்ச் 14 அன்று இதே விமான நிலையத்தின் ரேடார் அமைப்பை டிரோன்கள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.